துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு..!

301

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை 9 மணியளவில் வந்தடைந்த துணைஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் உடனிருந்து குடியரசு துணைத்தலைவரை வரவேற்றனர்.

சென்னை தரமணியில் உள்ள சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள வெங்கய்யா நாயுடு, இன்று பிற்பகல் 1 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணைஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி, விமான நிலையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.