வெனிஸ் திரைப்பட விழாவில் பிரபல நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

358

வெனிஸ் திரைப்பட விழாவில் பிரபல நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மிதக்கும் நகரம் என்றழைக்கப்படும் வெனிஸ் நகரில், 74வது திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இதில், ஜிம்கேரி உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடனமாடியே சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்திய நகைச்சுவை நடிகர் ஜிம் கேரி ரசிகர்களுக்கு கையெழுத்திட்டு புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்தார்.

இதே போல் தமது மதர் படத்தின் அறிமுகக்காட்சிக்காக வெனிஸ் வந்த பிரபல நடிகை ஜெனிபர் லாரன்சுக்கும் சிவப்புக் கம்பளத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானிய இயக்குனர் Hirokazu Kore இயக்கியுள்ள “The Third Murder”, படத்தின் அறிமுகக்காட்சியும் வெனிஸ் திரைப்பட விழாவில் அரங்கேறியது. இதையடுத்து, இவ்விழாவில் பங்கேற்க வந்த படக்குழுவினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு கொலை வழக்கு தொடர்பான சட்டரீதியான போராட்டத்தை பிரதிபலிக்கும் இப்படம் கோல்டன் குளோப் விருதுக்காக போட்டியிடுகிறது.