அதிக விளைச்சல் இருந்தும் உரிய விலைக் கிடைக்காததால் சின்ன வெங்காய விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

294

அதிக விளைச்சல் இருந்தும் உரிய விலைக் கிடைக்காததால் சின்ன வெங்காய விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் தென்காசி வட்டாரத்தில் பயிரிடப்படும் பணப்பயிர்களில், சின்ன வெங்காயமும் ஒன்றாகும். இலத்தூர், கிளாங்காடு ஆகிய பகுதிகளில் இந்த சின்ன வெங்காயம் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. இந்தாண்டு பல ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக 6 டன் சின்ன வெங்காயம் உற்பத்தியாகியுள்ளது. நல்ல விளைச்சல் இருந்த போதும், சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என நெல்லை மாவட்ட சின்ன வெங்காய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.