குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கைய்யா நாயுடுவும், கோபால கிருஷ்ண காந்தியும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

181

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கைய்யா நாயுடுவும், கோபால கிருஷ்ண காந்தியும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, ஆகஸ்டு 5ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில், நாடாளுமன்ற வாளகத்தில் உள்ள அலுவலகத்தில் வேட்பு மனுவை வெங்கைய்யா நாயுடு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அப்போது உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து கோபால கிருஷ்ண காந்தியும் தனது மனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.