நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை : வெங்கையா நாயுடு

227

நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க அரசு, நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க கட்சி தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும்படி, தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருவதை சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இதை சிலர், தவறாக புரிந்து, லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வரப்போவதாக பீதியை கிளப்பி உள்ளதாக தெரிவித்த வெங்கையா நாயுடு, அதற்கு அவசியமே இல்லை என்று மறுத்துள்ளார்.