500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுதால், ஏற்பட்டுள்ள குறுகிய கால சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறு மக்களை, மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

212

ஹைதராபாத்தில் ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை கட்டுப்படுத்துவது குறித்த புரட்சிகரமான நடவடிக்கை குறித்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு, பொருளாதார சீர்திருத்தத்திற்கான பன்முனை நடவடிக்கை என்று கூறினார்.
ஊழல் மற்றும் எல்லைக்கு அப்பாலிருந்தான சட்ட விரோத நடவடிக்கைகள் காரணமாக, இந்த துணிச்சலான நடவடிக்கை தேவைப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச செலாவணி நிதியம் இந்த முடிவை வரவேற்றுள்ளதாக கூறிய அவர், மத்திய அரசின் அறிவிப்பின் பலன், சாதரண மக்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.