அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட போவதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

376

அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட போவதாக தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள வெங்கய்யா நாயுடு, தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் ஒன்று திரள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடு, திருமலையில் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். சுவாமி தரிசனத்துக்கு பிறகு, கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்யா நாயுடு, சிறு வயது முதல் திருமலைக்கு வந்து செல்வதாக கூறினார். இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று, வல்லரசு நாடாக மாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். குடியரசு துணைத் தலைவர் என்ற உயரிய பதவியை ஏற்க உள்ள தான் வறுமையற்ற ஊழலற்ற இந்தியாவை உருவாக்க பாடுபட போவதாக வெங்கய்யா நாயுடு கூறினார்.