நாளை சென்னை வரும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிவார் என தகவல்..!

390

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை சென்னை வரும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தனர். இந்தநிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நாளை சென்னை வருகிறார்.

தரமணியில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும், நுங்கம்பாக்கத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வெங்கய்யா நாயுடு மருத்துவர்களிடம் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.