மத்திய பிரதேச மாநிலத்தில் வேம்பு, அரசு ஆகிய மரங்களுக்கு ஆடம்பரமான முறையில் நடைபெற்ற பிறந்த நாள்விழா பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.

158

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இந்த வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆதர்ஷ் சந்தைப் பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்குள்ள வேம்பு, அரசு ஆகிய மரங்களுக்கு 22-வது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.
மரங்களைச் சுற்றிலும் உள்ள தரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டு, மரங்களுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, வண்ணப் பட்டுப் புடவை உடுத்தப்பட்டது. ஏராளமான மலர்களைக் கொண்டு மரங்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்த, இசைக் கருவிகள் முழங்க, ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் பச்சை நிறத்தில் தயாரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.