ரமலான் பண்டிகைக்காக கோவா சென்று திரும்பிய போது நிகழ்ந்த விபரீதம்..!

335

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி விபத்தில் ஆம்பூரை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் 11 பேர், ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவாவிற்கு சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், சுற்றலாவை முடித்துக் கொண்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில், ஆம்பூரை சேர்ந்த சதாம், தவ்சிப், ஆசீப், ஷாருக், சதாம் ஹுசைன் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.