காவிரி விவகாரத்தில் பாஜக எந்த துரோகமும் செய்யவில்லை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

446

தமிழகத்திற்கு எந்த திட்டம் கொண்டு வந்தாலும், சிலர் எதிர்ப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார்.

கோவை சுற்றுலா மாளிகையில், வளர்ச்சி திட்டங்கள், சட்ட ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குற்றச் செயல்களை தடுக்க, பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு பாஜக எந்த துரோகமும்