உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி..!

248

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி அளித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில், திமுக எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முயன்றபோது, திமுக வழக்கு தொடர்ந்ததாக கூறினார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். தேர்தல் நடைபெறா விட்டாலும், உள்ளாட்சிகளில் பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேலுமணி விளக்கம் அளித்தார்.