ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அதிமுக அமைச்சர்!

151

உள்ளாட்சித் துறையில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் குறித்து ஸ்டாலின் விரும்பினால், மக்கள் மன்றத்தில் தனி மேடை அமைத்தோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க தயார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளற்ற புலம்பல்களுடன், மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள நெறியற்ற அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் செயலாக்கம் குறித்து அவர் சிறிதும் அறிந்திருக்கவில்லை என்பதையே காட்டுவதாக தெரிவித்துள்ளார். ஒளிவு மறைவற்ற முறையில் தேர்வு செய்யப்பட்ட, கேரள நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் நிறுவனத்துக்கும், தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில், அதை பினாமி நிறுவனமென ஸ்டாலின் குற்றம் சாட்டியிருப்பது உள்நோக்கம் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் குடும்ப உறவினர்கள் உள்ளடக்கிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவரின் பினாமி நிறுவனங்கள் என்று குற்றம் சுமத்தினால் ஏற்றுக்கொள்ளத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் துறையில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் குறித்து மக்கள் மன்றத்தில் தனி மேடை அமைத்தோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.