உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,558 கோடியை உடனே வழங்க வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

212

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 3 ஆயிரத்து 558 கோடியை உடனே கொடுக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிதி மற்றும் பெரும் நிறுவனங்கள் விவகாரத்துறை மந்திரி அருண் ஜெட்லியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் பல்வேறு வழக்குகள் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 3 ஆயிரத்து 558 கோடியை உடனே கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.