ரேக்ளா பந்தயத்தை வேலுமணி தொடங்கி வைத்தார் | போராட்டக்காரா்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

154

கோவையில் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்த அமைச்சர் வேலுமணியின் காரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் உள்ள கொடீசியா மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த ரேக்ளா பந்தயத்தை தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். சுமார் 200 மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
பல வீரர்கள் ரேக்ளா போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன. இதனிடையே அங்கு வந்த போராட்டக்காரர்கள் ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கூறி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசிக் கொண்டிருந்த மேடையின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனையடுத்து போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புறப்பட தயாரானபோது அவரது காரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.