நெல்லை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம்| வேலூர் அருகே தனிப்படை போலீசார் மீட்டனர்

262

பாளையங்கோட்டை நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டை அழகர் நகைக்கடையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 60 கிலோ தங்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கடையில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்றிரவு கொள்ளை போன தங்கத்தை வேலூர் அருகே காட்பாடியில் தனிப்படை போலீசார் மீட்டனர். கிறிஸ்டியான்பேட்டை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்தவர்கள் காவல்துறையினரை கண்டதும் வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர். பின்னர் காரில் இருந்த 38 கிலோ தங்க நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய 5 பேரும்,ஆந்திராவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, தனிப்படை அமைத்து காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.