வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி டாஸ்மாக் சூறை..!

162

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி, கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டங்கள், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேல்முருகனை விடுவிக்கக்கோரி கடலூர் மாவட்டம், சி.என்.பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.