சுங்கச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

235

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வரும் 42 பாதுகாப்பு ஊழியர்களுக்கு 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வாகன ஓட்டிகளால் ஏற்படும் தகராறுகள், அச்சுறுத்தல்களை சுங்கச் சாவடி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனை கண்டித்து 42 பாதுகாப்பு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நிர்வாகம் தலையிட்டு உரிய சம்பளத்தை பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.