வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

273

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரியாஸ் என்பவர், வேலூர் மாவட்டம் ராணிபேட்டை நகரில் கிரேட் பகுதியில் வசித்து வருகிறார். இவர், தோல் பொருட்கள் மற்றும் வேதி ரசாயனப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். தனது குடும்பத்தினருடன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு அவர் சென்றிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர், வீட்டின் பூட்டை உடைத்து திருடியள்ளனர். காலையில், அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன் பக்க கதவு திறந்திருப்பது கண்டு, ரியாசுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக ராணிப்பேட்டை திரும்பிய அவர், பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டார்.
அதில் வைக்கப்பட்டு இருந்த 18 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.