வேலூர் தொகுதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

94

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு, சத்யபிரதா சாஹூ மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார்.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த முறை ஒத்திவைக்கப்பட்டது. வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அவர் ஆலோசனை நடத்தினார்.