இணைய வழி தானியங்கி இயந்திர சேவை தொடக்கம் – மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி

114

காட்பாடி நீதிமன்றத்தில் வழக்கின் தன்மை குறித்து அறியும் இணைய வழி தானியங்கி இயந்திர சேவையை மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி நீதிமன்ற வளாகத்தில் வழக்குகளின் தன்மை குறித்து மக்கள் அறிந்து கொள்ள தானியங்கி இயந்திர சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கின் எண்ணை இந்த இயந்திரத்தில் பதிவு செய்தால், அந்த வழக்கின் தற்போதைய நிலை மற்றும் வாய்தாக்கள் பற்றி மக்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதனை மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இதில் பார் அசோசியேசன் சங்க செயலாளர் முனுசாமி, வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தையும் நீதிபதி ஆனந்தி தொடங்கி வைத்தார்..