வேலூர் தேர்தல் ரத்து || மாலை 4.30 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

127

வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலூர் தொகுதியில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி, தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் வேலூரில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம், தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனையடுத்து காலை 10.30 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மேலும் மாலை 4.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதிமுக, சுயேச்சை, தேர்தல் ஆணைய தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து நீதிபதிகள் தீர்ப்பளிக்கவுள்ளனர்.