வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்…!

152

வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறி வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்டு ஐந்தாம் நாள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட 31வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில், தர்க்கா ஆகியவற்றில் வழிபாடு நடத்திவிட்டுத் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவருடன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர். பிரச்சாரத்தின்போது பேசிய ஏ.சி.சண்முகம், பாலாற்றில் தடுப்பணை கட்டுவதாக உறுதியளித்தார்.