வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் மனுக்கல் ஏற்பு..!

146

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. .

வேலூர் மக்களவைத் தேர்தலுக்காக வேட்பு மனுதாக்கல் கடந்த 11 ஆம் தேதி துவங்கியது. இதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர், தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முக சுந்தரத்திடம் இறுதி நாளில் மட்டும் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 45 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் பொறுப்பாளர் வாலாஜா அசேன், பகுஜன் சமாஜ், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்கள் இன்று காலை 11 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்தநிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான கடிதத்தை இணைக்கவில்லை என தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பணம் பட்டுவாடா தொடர்பாக திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தின் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அதிமுக, திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்தாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபத்தால் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது என்றும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.