வேலூரில் டெங்கு ஆய்வு நடத்த சென்ற ஆட்சியரிடம் வீட்டிற்குள் வரக்கூடாது என கூறிய பெண் மருத்துவர் …!

720

வேலூரில் டெங்கு ஆய்வு நடத்த சென்ற ஆட்சியரிடம் வீட்டிற்குள் வரக்கூடாது என கூறி பெண் மருத்துவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு குறித்து ஆட்சியர் ராமன் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சி.எம்.சி காலணியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார். இதைக்கண்ட வீட்டின் உரிமையாளரான பெண் மருத்துவர், அனுமதியின்றி எப்படி என் வீட்டிற்குள் நுழையலாம் என கூறி ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அனைவரையும் வெளியே அனுப்பினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், சுகாதாரமற்ற நிலையில் இருந்த தனியார் கார் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அறிவுரைகளை வழங்கினார்.