கிருஷ்ணகிரி அருகே நேரிட்ட சாலை விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் பலியானார்.

241

கிருஷ்ணகிரி அருகே நேரிட்ட சாலை விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊமையனூர் பகுதியில் முன் சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அரசு பேருந்து சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. பழுதை நீக்கும் பணியில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஈடுபட்டிருந்தனர் அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. அந்த லாரி, முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து நடத்துனர் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்து ஓட்டுனர் ராமமூர்த்தி உட்பட 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.