பாகன் கஜேந்திரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

370

திருச்சி சமயபுரம் கோவிலில் யானை தாக்கி பலியான பாகன் கஜேந்திரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சமயபுரம் கோவிலில் யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் 5 லட்சத்துக்கான காசோலையை கஜேந்திரனின் குடும்பத்தினரிடம் வழங்கினர். கஜேந்திரனின் குடும்ப வாரிசுக்கு அரசு வேலை கொடுப்பது பற்றி முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி அளித்தார்.