வறுமை, கல்வி, ஊட்டச்சத்து குறைபாடு பெரிய சவாலாக உள்ளது -பிரதமர் மோடி!

326

வறுமை, கல்வி, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இவற்றை வென்று எடுக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மக்களவையில் உரையாற்றிய பிரதமர், சுதந்திர போராட்டங்களை பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விடுதலைக்காக மட்டுமின்றி, இன வேறுபாட்டை களையவும் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை பின்பற்றி மக்கள் பல தியாகங்களை செய்ததை நினைவு கூர்ந்த பிரதமர், நாடு ஒன்றுபட்டால் தடைகள் அனைத்தும் நீங்கும் என்று தெரிவித்தார். வறுமை, கல்வி, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை பெரிய சவாலாக இருப்பதாகவும், ஒரே இலக்கை நோக்கி போராடினால் இவற்றை வெல்லலாம் என்று அவர் கூறினார். 2022 ம் ஆண்டில் ஏழ்மை, ஊழல், பயங்கரவாதம், மதவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபடுவோர் என்று அவர் கேட்டுக் கொண்டார்.