வெள்ளை உடை அணிந்து வந்த ஜனநாயக கட்சி பெண்கள் : டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு !

261

பெண்களுக்கான உரிமையை வலியுறுத்தும் விதமாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 66 பெண் உறுப்பினர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வெள்ளை நிற உடையணிந்து வந்திருந்தனர்.
அதிபராக பதவியேற்றபின் முதன்முறையாக இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றிய போது இந்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது. பெண்கள் உரிமையை பறிக்கும் விதமாக டிரம்ப் நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை ஒற்றுமையுடன் எதிர்ப்போம் என்பதை குறிக்கும் விதமாகவும், பெண்களின் முன்னேற்றத்தை ஆதரிக்கும் பொருட்டும் வெள்ளை நிற உடையணிந்து வந்ததாக. அவர்கள் விளக்கம் அளித்தனர். 20ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு ஆதரவாக சஃப்ரகெட்டிஸ் ((suffragettees)) அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் தூய்மையை பிரதிபலிக்கும் நிறமாக வெள்ளை நிறம் இருந்தது குறிப்பிடத்தக்கது.