வெள்ள பாதிப்பை தடுக்க நபார்டு வங்கி உதவியுடன் 445 கோடி ரூபாய் திட்டம் தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அறிவிப்பு

155

தமிழக பட்ஜெட்டில் வெள்ள பாதிப்பை தடுக்க 445 கோடி ரூபாய் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகை மற்றும் நொய்யல் ஆறுகளின் நீர்வரத்தினை நிலைப்படுத்தவும், அந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள காடுகளின் வளத்தைப் பெருக்க 24 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகளின் தாக்குலால் ஏற்படும் உயிரிழப்பு, பயிர் சேதம் போன்வற்றிற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளுக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். அதன்படி, வடிகால்களை அகலப்படுத்துதல், வாய்க்கால்களின் வரப்புகளையும், நதிக் கரைகளையும் பலப்படுத்துதல் போன்ற வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு 140 கோடி ரூபாய் நிதி நபார்டு வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று,
எளிதாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய சென்னை போன்ற கடலோர மாவட்டங்களுக்காக, விரிவான வெள்ளப் பாதுகாப்பு திட்டம் ஒன்றையும் அரசு தயாரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக இந்த நிதியாண்டில் 445 கோடி ரூபாய் நிதியுதவி நபார்டு வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.