எதிர்கட்சியினரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றியது சட்டவிரோதமானது என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

281

எதிர்கட்சியினரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றியது சட்டவிரோதமானது என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய ஆளுனரை வலியுறுத்தியதாக கூறினார். இந்த விவகாரத்தில் ஆளுனர் வித்யாசாகர் ராவ் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாகவும் பாண்டியராஜன் குறிப்பிட்டார். மேலும், எதிர்கட்சியினரை சட்டப்பேரவையில் இருந்து நீக்கியது சட்டத்திற்கு விரோதமானது என்று கூறிய அவர், அதிமுக எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தை அறியவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.