வேளாங்கன்னி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்குகிறது.

258

வேளாங்கன்னி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்குகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் புகழ்பெற்ற வேளாங்கன்னி ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. கீழ்திசை நாடுகளில் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் வேளாங்கன்னி பேராலயத்தில் உள்ள ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் மாதம் 8 தேதி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நவநாள் கொண்டாட்டம் இன்று வேளாங்கன்னி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்துள்ளனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. பெருவிழாவை யொட்டி தமிழக அரசு சார்பில் குடிநீர், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.