வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

139

வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்று நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி ஆலய பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் கொடியேற்றி வைத்தார். கொடி உச்சியை அடைந்ததும், வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வானன பெரிய தேர் பவனி செப்டம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது.