காங். கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றம் தேவை – வீரப்ப மொய்லி கருத்து

123

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கட்சிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் தேவைப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தோல்வியை காரணம் காட்டி பதவி விலகுவது ராகுல் காந்திக்கு அழகல்ல எனவும், தன்னை நிரூபித்து காட்ட ராகுல் காந்தி மேலும் கால அவகாசம் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் கட்சியின் மாநில பொறுப்பாளர் பதவிகளுக்கு சரியான நபர்களை தேர்வு செய்து நியமிப்பதிலும் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும் என்றும், தேர்தல்களில் போட்டியிட தகுதியான காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.