தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி

120

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தையும், சட்டமன்றத்தையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வலியுறுத்தினார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக எம்பி-க்கள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.