இசைப்பல்கலைக்கழக துணை வேந்தர் வீணை காயத்ரிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

294

இசைப்பல்கலைக்கழக துணை வேந்தர் வீணை காயத்ரிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை பல்கலை கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் வீணை காயத்ரி. இந்த பல்கலைகழக வளாகத்தில் உள்ள இவரது அலுவலகத்தில் நேற்று மர்ம கும்பல் ஒன்று புகுந்து, அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை உடைத்து சூறையாடியது. அத்துடன் அந்த அறையில் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதுபற்றி வீணை காயத்ரி, பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து போது, அறையில் இருந்த சில ஆவணங்களும் மாயமானது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இசைக்கல்லூரியில் சீட்டு கேட்டு வீணை காயத்ரியிடம் சிலர் தகராறு செய்துள்ளனர். அவர்கள் இந்த கொலை மிரட்டலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் மிரட்டல் விடுத்த மர்மநபர்களை தீவிர தேடிவருகின்றனர்.