அரக்கோணம் அருகே சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்..!

1070

அரக்கோணம் அருகே சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு சிறுமியை மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் செல்வதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்ட அவர்கள் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தக்கோலம் காவல் துறையினர் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற துளசி ராமன் என்ற வாலிபரை கைது செய்தனர். போலீசாரின் உடனடி நடவடிக்கையால் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து பெற்றோரும், பொது மக்களும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.