ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

416

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி முசிறியை சேர்ந்த பொறியாளர் தங்கவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முதலமைச்சரின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.