வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 6 வது நாளாக கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை…!

220

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 6 வது நாளாக கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை..
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 6வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. 500க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.