வேதாரண்யம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…!

234

வேதாரண்யம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவரது 28 வயது மகன் அன்பரசன் அங்குள்ள இரும்புக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திருத்துறைபூண்டி அரசு மருத்துவமனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.