வேதாந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!

109

மாசுகட்டுபாட்டு வாரியத்தின் விதிகளை முறையாக பின்பற்றிய போதும், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டதாக ஸ்டெர்லைட் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன், இன்று ஆறாவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, ஸ்டெர்லைட் ஆலை மாசுகட்டுபாட்டு வாரியத்தின் விதிகளை முறையாக பின்பற்றி வந்த நிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடபட்டுள்ளதாக தெரிவித்தார். முறையாக அனுமதி பெற்று இயங்கும் தொழிற்சாலைகளால் கூட சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஸ்டெர்லைட் ஆலையால் மிக குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு தீயணைப்பு மற்றும் சுற்றுசூழல் துறையின் அனுமதி உள்ளதா என கேள்வி எழுப்பினர். ஆலைக்கு தீயணைப்பு மற்றும் சுற்றுசூழல் அனுமதி உள்ளதாகவும், அதை கருத்தில் கொள்ளாமல் அரசு ஆலையை மூடியுள்ளதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் வழக்கில், அடுத்த வாரம் மூன்று நாட்கள் வாதங்கள் வைக்க அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.