வாகனம் நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்-மெரினா கடற்கரை, சென்னை

373

சென்னை மெரினா கடற்கரையில் வாகனம் நிறுத்துவதற்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதில் மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது
தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு தொழிலாளர் அமைப்பினர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்
அரசு ஊழியர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகராட்சி சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்