சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை கேட்காதது ஜனநாயத்துக்கு எதிரான செயல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

392

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை கேட்காதது ஜனநாயத்துக்கு எதிரான செயல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என கூறிய அவர், குடியரசு தலைவர் தேர்தலில் மதவாத கட்சிகளுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினின் கருத்தை கேட்காததற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.