விசிக மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன், ரவிக்குமார் வைகோவுடன் சந்திப்பு..!

235

பண பலத்தையும் மீறி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெற்றி பெற்றதாக வைகோ தெரிவித்தார்.

சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற தொல்.திருமாவளவனும், ரவிக்குமாரும் சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, இந்தத் தேர்தல் தமிழகத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.வைகோவை தொடர்ந்து பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டதாகவும், மதச்சார்பின்மை கருத்தியலை பாதுகாக்க தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.