வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம். சிறப்பு பிராா்த்தனையில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பு.

194

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில், போப்பாண்டவர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்தனையில் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் போப் ஆண்டவர் தலைமையில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், உலகமெங்கும் உள்ள லட்சகணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் இயேசு பிறந்ததன் அடையாளமாக குழந்தை இயேசு சிலையை போப் முத்தமிட்டார். இதைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.