மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார்

254

மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில், விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்காத வகையில் திட்டப் பணிகளை செயல் படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.