வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 10 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வெளிநாட்டு நன்கொடை பெருமளவு குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.

373

வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 10 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வெளிநாட்டு நன்கொடை பெருமளவு குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.
இண்டியாஸ்பெண்ட் என்ற அமைப்பு, வெளிநாடுகளில் இருந்து இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நன்கொடைகள் பற்றி ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அதில், கடந்த 2014 ஆம் ஆண்டை ஒப்பிடும் கடந்தாண்டு வெளிநாட்டு நன்கொடைகள் பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு 10 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் டெல்லியில் உள்ள தொண்டு நிறுவனங்கள் 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு நன்கொடைகளாக பெற்றுள்ளதாகவும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் தலா 5 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக வாங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 33 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.