நகைக்கடை உரிமையாளர்களின் 18 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.. ரூ.70,000 கோடி வர்த்தகம் பாதிப்பு..!

209

நகைக் கடைகளின் மீது மத்திய அரசு விதித்த கூடுதல் கலால் வரி மற்றும் 2 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகத்திற்குப் பான் கார்டு கட்டாயம் போன்ற முக்கியமான பிரச்சனைகளை விரைவில் முடிவிற்குக் கொண்டு வர இந்தியாவில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களின் அனைவரும் ஒன்றுகூடி காலவரையற்ற நிலையில் கடைகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜெம்ஸ் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (GJEPC) அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சனிக்கிழமை நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் செய்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் இவ்வமைப்புப் போராட்டத்தை இந்தியா முழுவதிலும் நிறுத்திக்கொள்வதாகவும் ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான முறையில் நகை கடைகள் செயல்படும் எனவும் சனிக்கிழமை இரவு அறிவித்தது.