சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம்..!

83

சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ இயக்குனர்களாக இருந்த அலோக் வர்மா, அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சபுகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இந்த நிலையில் அலோக்வர்மா மீண்டும் பதவி வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் சிபிஐ இயக்குனர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவருடன் மாற்றப்பட்ட அதிகாரிகளையும் பணிக்கு வரவழைத்தார் . இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர். இதில், ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் அலோக்வர்மாவை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அலோக் வர்மா வருகிற 31-ந்தேதி ஓய்வு பெறும் நிலையில் மத்திய அரசின் நியமனக்குழு அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து அவர் தீயணைப்புதுறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.