rice

வந்தவாசி அருகே 8 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை அமைப்பதிற்கும், இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளுக்கு விவசாயிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் திருவண்ணாமலையில் வந்தவாசி அடுத்த தளரப்பட்டி, இஞ்சிமேடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் பசுமை வழிச்சாலைக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து நிலத்தில் கற்களை நடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.